சென்னை,ஜன.11- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.1.2022) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் 104 கோடியே 81 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 66 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 45 கோடியே 15 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 365 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 40,095 பயனாளிகளுக்கு 209 கோடியே 76 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, ஈரோட்டிலிருந்து காணொலி வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்சு. முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வ ராஜ், அ.கணேசமூர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், இ.திருமகன் ஈவெரா, சி.கே. சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் எச். கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment