தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநர் 'கவிஞர் கூ.வ.எழிலரசு'வின் நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநர் 'கவிஞர் கூ.வ.எழிலரசு'வின் நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம், ஜன. 19- 8.1.2022 அன்று மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம், அக்ரியா விழா அரங்கில், தமிழ்நாடு அரசின் மேனாள் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் கவிஞர் கூ.. எழிலரசுவின் 'இன்னுமொரு விடு தலை' , 'கூ..எழிலரசு கவிதைகள்' ஆகிய இரண்டு நூல்களின் வெளி யீட்டு விழா செம்மொழித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

முற்போக்குச் சிந்தனையாளர் மருத்துவர் விமுனா மூர்த்தி தலை மையில், கவிஞர் தங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் தொடங்கி யது. சங்கச் செயலாளர் கூழமந்தல்  சீ.உதயகுமார் வரவேற்புரை நிகழ்த் தினார். கவிதை நூல்களை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு..மாணவரணிச் செயலாளரு மானசி.வி.எம்.பி.எழிலரசன் வெளி யிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அறிஞர் அண்ணா பேரவை தலைவர் வழக்குரைஞர் பூ. இராஜி,  'அக்ரியா பிராப்பர்ட்டீஸ்' கூழமந் தல் .வகாப் ஆகியோர் கவிதை நூல்களை பெற்றுக்கொண்டு உரையாற்றினர்.

மாவட்ட தி.மு. அவைத் தலை வர் சி.வி.எம்..சேகரன், திராவிடர் கழகச் சொற்பொழிவாளர் முனை வர் காஞ்சி பா.கதிரவன், தொல் காப்பியப் புலவர் வெற்றியழகன், திருவள்ளுவர் அறக்கட்டளை  தமிழ். முகிலன், கவிஞர் பாரதி விசயன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர் கவிஞர் கூ..எழி லரசு ஏற்புரை நிகழ்த்தினார். திருக் குறள் பேரவை குறள் அமிழ்தன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

'இன்னுமொரு விடுதலை' என்ற நூல் 1984இல் வெளிவந்த நூலின் மறுபதிப்பாகும். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அணிந்துரை எழுதியுள்ள புதுக்கவிதை நூலாகும்.

'கூ..எழிலரசு கவிதைகள்' என்ற நூலில் பகுத்தறிவுச் சிந்த னைகள், பெண்ணடிமை ஒழிப்பு, தமிழ் மொழியின் சிறப்புகள், பெரியார், அண்ணா, புரட்சிக் கவிஞர், கலைஞர், பேராசிரியர் மற்றும் பலரைப் பற்றி பாடியுள்ள மரபுக்கவிதை நூல் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

நூலாசிரியர் ஒரு 'பெரியார் கொள் கையாளர்' என்பதை நூலின் பல இடங்களில் காணமுடிகிறது.

No comments:

Post a Comment