சென்னை, ஜன.18 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வா ரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுமற்றும் பல்வேறு நலத் திட்டஉதவித் தொகைகள் உயர்த் தப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் தமிழ்நாடு தூய்மைப் பணியா ளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் இயற்கைமரணத் துக்கு இழப்பீடு, முதியோருக்கு ஓய் வூதியம், உறுப்பினர்களின் பிள்ளை களுக்கு திருமணம், கல்விக்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்படு கிறது.
இந்நிலையில், பல்வேறு திட்டங்களின் உதவித் தொகையை 100 சதவீதம் அதிகரித்தும், புதிய உதவித் தொகை திட்டத்தையும் ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, வாரிய உறுப்பினர்கள் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.5 லட்சம் வழங்கப் படும். கை, கால் அல்லதுஒரு கண் இழப்புக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்ச மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முழு இயலாமைக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம்
மேலும், முதியோர் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாகவும், இறுதிச் சடங்குக்கு ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணத்துக்கு ரூ.20 ஆயிர மாகவும் நிதி உதவி அதிகரிக்கப் பட்டுள்ளது.
அதேபோல, உறுப்பினர்களின் பெண் பிள்ளைகளுக்கு (2 முறை) ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஆண் பிள்ளைகளின் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரம் வழங் கப்பட உள்ளது.
7 பிரிவுகளின் கீழ் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment