யுனிவர்சிட்டி மானிய கமிஷன் மாணவர்களை சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லி சுற்றறிக்கை அனுப்பியதற்குக் கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
யுஜிசி என்னும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் சுற்றறிக்கை ஒன்றினை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. இந்திய சுதந்திர விழாவின் 75 ஆம் ஆண்டையொட்டி ஜனவரி ஒன்று முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிவரை மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டுமாம்.
இந்தக் கொடுமையை என்னவென்று சொல் லுவது! ஒரு கல்வித் துறை உயரதிகார அமைப்பு அறிவியலுக்கு விரோதமாக, புராண மூடத்தனத்தை சுமந்து, அதனை மாணவர்கள் தலையில் கட்டுவது - அடிமுட்டாள்தனமும், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமுமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு - விஞ்ஞான மனப்பான்மையையும், சீர் திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத் துகிறது.
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்த அறிவிப்பை விலக்கிக் கொள்ளவேண்டும்.
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டுள்ள பல்கலைக் கழக மானியக் குழுவின்மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
1.1.2022
No comments:
Post a Comment