காவிச் சாயம் வெளுக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

காவிச் சாயம் வெளுக்கும்

"விடுதலை" நாளிதழ் ஜனவரி 18இல் வெளிவந்த 'கோட்சேயின் கைத்துப்பாக்கி' தலையங்கம் வாசித்தேன். காந்தியார் அகிம்சை முறையில் போராடி விடுதலை பெற்றுத் தந்தது போல், சமூகநீதி ஒற்றுமைக்கும், மதங்களை கடந்துமனிதநேயத்திற்கும் விடுதலை பெற்று தந்து விட் டால், தாங்கள் நாட்டில் சுகபோக வாழ்வு வாழ முடியாது என்று எண்ணிய பார்ப்பனர்கள், தேசத்தில் முதல் மத விசத்தை தடவி கோட்சே  எனும் தோட்டா மூலம் காந்தி யாரை அழித்து இன்பம் கொண்டனர்.

காந்தியார் உருவத்துடன் பணத்தாள்களை அச்சிட்டுக் கொண்டே, மறுபுறம் கோட்சே புகழ் பாடுகிறது பார்ப்பன (விசம்) ஜனதா கட்சி. ஒருபுறம் தேனை தடவிக்கொண்டே மறுபுறம் நஞ்சை விதைக்கிறது இந்தியா இந்துக்களுக்கானது, இந்துகடவுளுக்கு கோவில் எழுப்புவது என இந்து மதவெறி ஆட்சி இறுமாப்பு ஆட்டம் ஆடுகிறது.  காந்தியாரை கொன்றது இதற்குத் தான் என எண்ணி உச்சிமேல் தலை கால் தெரியாமல் ஆடுகிறது  பா... 

தேச ஒற்றுமை காணாமல் போய்விட்டது, தேசத் தலை வர்கள் மறைக்கப் படுகிறார்கள், சமூகநீதி ஒழிக்கப்படுகிறது, மக்களாட்சி கேள்விக்குறியாகக்கப்படுகிறது, இத்தனையும் இந்துமதம் என்ற போர்வையில், இந்து கடவுள்கள் என்ற திரைச்சீலையால் மறைக்க,  ஒழிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தானது.  காந்தியார், தந்தை பெரியார், புரட்சியாளர் பகத்சிங், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் மறையவில்லை, விதைக்கபட்டுள்ளார்கள். எனவே  இனியும் இங்கு மத நஞ்சு பரவ முடியாது. இந்தியா பா... விற்கு தான் என எழுதிதரப்படவில்லை. காலம் சுழலும், பா.. ஆட்சி ஒழியும். மத நஞ்சான பா.. அடியோடு நசுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தொலைநோக்கு சிந்தனையாளர் அய்யா பெரியார் அவர்கள் அன்றே 'காந்தி நாடு' என இந்தியாவிற்கு பெயரிட சொன்னது எவ்வளவு மெய்யான கருத்து என்பது தெளிவாக புலப்படுகிறது.

'காந்தி வாழ்க' என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் வேளையில் 'கோட்சே ஒழிக' என்றும் ஓங்கி ஒலிக்க வேண்டும். கோட்சேயின் துப்பாக்கி நொடித்துப்போன ஒன்று, துருப் பிடித்துப் போனது, உதவாத ஒன்று  என விரல் மை மூலம் பா.. வின் காவிச்சாயத்தை வெளுக்க உறுதி கொள்வோம். பெருமை காக்க அல்ல உரிமை வெல்ல என களம் காண இணைவோம். 

- மு.சு. அன்புமணி, மதுரை

No comments:

Post a Comment