கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பீர்!
தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்
சென்னை, ஜன.2 தடுப்பூசி போடாத வர்கள் உடனே கண்டிப்பாக போட்டுக் கொள்ளுங்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய உடல்நலனும் தனக்கு மிகவும் முக்கியம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில் கூறியிருப்ப தாவது:-
உங்களுடைய நலனுக்கும்...
2022-ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங் களை நாம் மறந்து விடக்கூடாது. கரோனா என்ற நோய் தொற்றின் முதலா வது அலை மற்றும் இரண்டாவது அலை யில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருந்தபோதுதான், உங்களுடைய முதல மைச்சராக மட்டும் அல்ல, உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இரண்டாவது அலையை கட்டுப் படுத்துவதுதான் என்னுடைய முதல் வேலையாக இருந்தது. என்னுடன் நம் அமைச்சர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர், உள்ளாட்சி நிர் வாகத்தினர், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என்று பல்வேறு துறை களை சார்ந்தவர்கள் இணைந்து நின்று செயல் பட்டார்கள். அதை மறக்கவே முடியாது. அதனால் குறைந்த கால அளவிலேயே, இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். அதற்கு பொது மக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பும் முக்கிய காரணமாக இருந்தது.
யாரும் பயப்படத் தேவையில்லை
தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தியபோது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்டீர்கள். உங்களுடைய ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத் தியது. அதனால் தடுப்பூசி போட்டவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கரோனா பரவலையும், இறப்பு எண்ணிக் கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஓர் ஒத்து ழைப்பைத்தான் இந்த புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர் பார்க்கிறேன்.
கரோனா தொற்று பல உருமாற்றங் களை அடைந்திருக்கிறது. இப்போது ஒமைக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அத னுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு, தேவையான எல்லா நடவடிக் கைகளையும் எடுத்து வருகிறது. வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங் களிலிருந்தும் வருபவர்களுக்கான பரி சோதனை, நம் மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை, மருந்து அனைத்தும் போதுமான அளவில் இருக்கிறது. கூடுதல் தேவையை யோசித் தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற் பாடுகளை செய்திருக்கிறோம். அதனால் நீங்கள் யாரும் பயப்படத்தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவைப்படுகிறது.
இடைவெளியை கடைப்பிடியுங்கள்
ஒமைக்ரான் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் போட்டி ருக்கிறது. அது உங்கள் பாதுகாப்பிற்காகத் தான். அந்த கட்டுப்பாடுகளை கடைப் பிடியுங்கள். கோவிட் காலத்தில் கடைப் பிடிக்க வேண்டிய பழக்கங்களை கட்டாய மாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
அவசர தேவைகள், அன்றாட பணி களுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியை கடைப் பிடியுங்கள். சானிடைசர் பயன்படுத் துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாக கையை கழுவுங்கள். முகக்கவசத்தை கட் டாயம் பொது வெளியில் போட்டுக் கொள்ளுங்கள். அதை எப்போதும் மறந்து விடாதீர்கள். அது உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உங்களை சார்ந்திருக்கக்கூடிய அனைவருடைய பாதுகாப்பிற்காகத் தான்.
ஒத்துழைப்பு தாருங்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டுக்கொள்ளுங்கள். முதல் தவணை போட்டவர்கள், உங்களுக்கு சொல்லப் பட்ட தேதியில் இரண்டாவது தவ ணையைப் போட்டுக்கொள்ளுங்கள். ஜனவரியில் இருந்து ஒன்றிய அரசு, 15 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி திட்டத்தை செயல் படுத்த அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு அந்த திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தும். உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறார்கள் இருந் தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுக் கொண்டு வாருங்கள்.
தடுப்பூசி முழுமையாக போட்டி ருந்தால், ஒமைக்ரான் நோய்த் தொற்று ஏற்பட்டாலும், அதனுடைய தாக்கம் மிக மிக குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள். அதனால் இதுவரையில் தடுப்பூசி போடா தவர்கள் உடனே கண்டிப்பாக போட்டுக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒவ் வொருவருடைய உடல்நலனும், உங்க ளுடைய முதலமைச்சரான எனக்கு மிகவும் முக்கியம்.
அதற்காகத்தான் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தமிழ் நாட்டு மக்களான நீங்கள் நிச்சயமாக ஒத் துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க் கிறேன். அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதல மைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment