சிவகங்கை மாவட்ட தலைவர் உ.சுப்பையா இறுதி நிகழ்வு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் கழகத்தினர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

சிவகங்கை மாவட்ட தலைவர் உ.சுப்பையா இறுதி நிகழ்வு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் கழகத்தினர் மரியாதை

சிவகங்கை, ஜன. 18-- சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர் .சுப் பையா (வயது 72) 13-.01.-2022 அதி காலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் . சிறிது காலம் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த அவர் தஞ்சாவூர் மீனாட்சி மருத் துவமனையில் மறைவுற்றார்.

பின்னர் அவரது உடல் சிவ கங்கையில் உள்ள அவரது வீட் டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உத்தரவுப் படி தலைமைக் கழகத்தின் சார்பில் மண்டல தலைவர் சாமி.திராவிட மணிதலைமையில் அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், மேனாள் வழக்குரைஞரணி அமைப் பாளர் .இன்பலாதன், மண்டல செயலாளர் .மகேந்திரராசன், சிவகங்கை மாவட்ட செயலாளர் பெ.ராஜாராம், காரைக்குடி மாவட்ட துணை தலைவர் கொ.மணிவண்ணன், சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் .அனந்தவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செயலெட்சுமி, ஜெ.தனபாலன், .வள்ளிநாயகம், மேனாள் மாவட்ட செயலாளர் வேம்பத்தூர் ஜெயராமன், மருத்துவர் .மலர்க் கன்னி, மருத்துவர் .இராஜரா ஜன், மருத்துவர் ஜெ.பெரியார் லெனின், சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் வைகை .தங்க ராசா, மாநில ..துணைத் தலை வர் பொன்னமராவதி சரவணன், புதுக்கோட்டை மாவட்ட செயலா ளர் பெ.வீரப்பன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் வாரியன்வயல் ஜோசப், வைகை கணேசன், மதுரை மண்டல செயலாளர் .முருகேசன், மதுரை மண்டல தலைவர் சிவ குருநாதன், காரைக்குடி மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, நகர தலை வர் .ஜெகதீசன், தி.மு.. மாவட்ட செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, மாவட்ட தி.மு..மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், துணை அமைப் பாளர் மார்க்ரெட், வழக்குரைஞர் .கார்கண்ணன், மேனாள் நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப் கான், ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மதுரை வரதராசன் உள்ளிட்ட தோழர்கள் இறுதி நிகழ் வில் பங்கேற்று மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

மாலை 4.30 மணியளவில் அன் னாரது உடல் எவ்வித மூடச் சடங் குகளுமின்றி எரியூட்டப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் அனுப்பிய இரங்கல் செய்தி அறிக்கை வந்திருந்த அனைவருக் கும் வழங்கப்பட்டது. அன்னாரது வாழ்விணையர் மணி மேகலை, மகள் பொறியாளர் கீதப் பிரியா, மருமகன் இரவிச்சந்திரன், மகன் பொறியாளர் அருண்குமார்,  மருமகள் டாக்டர் பிரியா, மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு ஆறு தல் கூறினர்.

No comments:

Post a Comment