இந்த ஹெலிகாப்டர் ஆளில்லாமல் பறக்கும் தானோட்டி ரகம். அதுமட்டுமல்ல. ஒரு சிறிய ரோபோவும் இந்த குட்டி ஹெலிகாப்டரில் இருக்கும்.அது ஹெலிகாப்டரில் சரக்கை ஏற்றும், அதனுடனேயே போய் தரையிறங்கி, முகவரிதாரருக்கு சேர்க்கவேண்டிய தூதஞ்சல்களை எடுத்துப் போய் கொடுத்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் ஏறிக்கொளளும்.
எதற்கு இந்த திடீர் மினி ஹெலிகாப்டர் முயற்சி?
உலகெங்கும் சரக்குப் போக்குவரத்தில் வேலையாட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல், ஆறு, மழைவெள்ளம், கடல் போன்ற புவியியல், தட்பவெப்பத் தடைகளைத் தாண்டி, சரக்குகளைப் போடும் ஒரு வாகனமாக சிறிய ஹெலிகாப்டர்களை தேர்ந்தெடுத்திருப்பதாக கவாசாகியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனம் ஒரு கலவைப் பிறவி. ஹெலிகாப்டரைப் போல தலைக்குமேல் சுழலும் விசிறிகள் வாயிலாக செங்குத்தாக தரையிலிருந்து கிளம்பவும், இறங்கவும் ரேசரால் முடியும். ஆனால், முன்னோக்கிச் செல்வதற்கு, விமானம் போல வலமும் இடமும் இறக்கைகளும் இயந்திர விசிறிகளும் உள்ளன.
பேரிடர் காலங்களில், 100 கிலோ எடையை சுமந்து பறக்கும் திறன் கொண்ட கவாசாகியின் ரேசர் ஹெலிகாப்டர் மருந்துகள், உணவு, உடை போன்றவற்றை வேண்டியோர்க்கு கொடுக்க உதவும். அதுமட்டுமல்ல, தீவுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அத்தியாவசியங்களைக் கொண்டு தர இது உதவும்.
No comments:
Post a Comment