‘மகிந்திரா’ நிறுவனத்தில் வாகனத்தை திருப்பி அளிக்க வசதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

‘மகிந்திரா’ நிறுவனத்தில் வாகனத்தை திருப்பி அளிக்க வசதி

மும்பை, ஜன. 19- மகிந்திரா நிறுவனத்தின், ‘டிரக் மற்றும் பேருந்துபிரிவு, கூடுதல்மைலேஜ்கிடைக்கவில்லை என்றால் வாகனத்தை திருப்பிக் கொடுத்துவிடலாம் என அறிவித்துள்ளது.

மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமான மகிந்திரா டிரக் அண்டு பேருந்து பிரிவு, அதன் அனைத்து பி.எஸ்., 6 டிரக்குகளை வாங்கி கூடுதல் மைலேஜை பெறுமாறும், அவ்வாறு கிடைக்காவிட்டால் டிரக்கை திருப்பி கொடுத்துவிடலாம் என்றும் உறுதி அளித்து உள்ளது. மகிந்திரா நிறுவனம், 3.5 டன்னில் துவங்கி, 55 டன் வரையிலான டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பானபால்ஸோடிரக்கு களுக்கு, கடந்த 2016இல், இது போன்ற உத்தரவாதத்தை, அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது குறிப் பிடத்தக்கது,

தற்போது சிறு, நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கு இத்தகைய உத்தரவாதத்தை நிறு வனம் வழங்கி உள்ளது.இந்த உத்தரவாதம், தங்கள் நிறுவனத்தின் மீது, வாடிக்கையாளர்கள் கொண் டிருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும் என மகிந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment