சென்னை,ஜன.2 மழைநீர் சூழ்ந் தாலும் சீரான மின் வினியோகம் வழங்க சென்னையில் மின்சார பில்லர் பெட்டிகளை ஒரு மீட்டர் உயர்த்தி மாற்றி அமைக் கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலு வலகத்தில் உள்ள மின் நுகர் வோர் குறைதீர்க்கும் மின்னகத் தில் 30.12.2021 அன்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அத னைத் தொடர்ந்து சென்னை மின் நுகர்வோர் கட்டுப்பாட்டு மய்யத்தையும் பார்வையிட் டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- சென் னையில் பெய்த அதி கனமழை காரணமாக 32 பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப் பட்டு, மின்சாரத்துறை, மாநக ராட்சி நிர்வாகம் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு, 23 பகுதிகளில் மின்வினி யோகம் மீண்டும் வழங்கப் பட்டது.
மீதம் இருக்கும் பகுதிகளில் மின் வினியோகம் வழங்குவதற் காக அங்குள்ள மழைநீரை அகற்று வதற்கான பணிகளை விரைந்து செய்து வருகிறோம்.
முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட மின்னகத் துக்கு இதுவரை 5 லட்சத்து 77 ஆயிரம் புகார்கள் வந்தன. அதில் 98 சதவீதம் தீர்வு காணப் பட்டு இருக்கிறது.
சென்னையில் 3 பேர் மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட் டுள்ளது பற்றி விரிவான ஆய்வு கள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த முறை வடகிழக்கு பருவமழையால் மழைநீர் சூழ்ந்து இருந்த பகுதிகளில் 1 மீட்டர் அளவுக்கு மின்சார பில்லர் பெட்டிகளை உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதற்கான பணிகளை கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறோம். அடுத்த மழை காலம் வருவ தற்குள் சென்னை மாநகராட்சி முழுவதுமாக அனைத்து மின்சார பில்லர் பெட்டிகளும் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டு மாற்றி அமைக்கப்படும்.
அதனால் மழைநீர் சூழ்ந்தால் கூட சீரான மின் வினியோகம் வழங்கக்கூடிய அளவில் மின் சாரத்துறை அதற்கான நடவடிக் கைகளை முதலமைச்சரின் வழி காட்டுதலின்படி எடுத்து வரு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment