மணிபால் அகாடமி ஆப் பிஎப்எஸ்அய் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து "ஆக்சிஸ் பேங்கின் யங் பேங்கர்ஸ் (இளம் வங்கியர்)" திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பிப்ரவரி 2022 பேட்ச்சுக்கான சேர்க்கை தொடங்குகிறது.
இது 19ஆவது பேட்ச் ஆகும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் பங்கேற்பாளர்களுக்கு மணிபால் அகாடமி ஆப் ஹையர் எஜூக்கேஷன் மூலம் வங்கி சேவைகளில் முதுகலை டிப்ளமா சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பட்டம் பெறுவோர் ஆக்சிஸ் வங்கியின் கிளை உறவு அதிகாரி பொறுப்புடன் உதவி மேலாளர் பதவியில் அமர்த்தப்படுவார்.
இந்த பயிற்சித் திட்டம் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 6 மாதங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு நிபுணர்களின் விரிவுரைகள் இ-லேர்னிங் தொகுப்புகள், மாதிரி கிளை செயல்முறைகள், கேஸ் ஆய்வுகள், களப்பார்வை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கியில் 3 மாத இன்டர்ஷிப் வழங்கப்படுகிறது. அங்கு நிகழ் நேரத்தில் அவர்களது வேலைத்திறனை ஆராய்வதுடன் திறம்பட உயர்த்திக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பயிற்சி திட்டம் இந்தியாவில் இளம் வங்கியராக வங்கிப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களைத் தயார் படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்சிஸ் வங்கியில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 9000க்கும் மேலானவர்களின் வெற்றி கதைகளுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வங்கித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்த ஆசிரியர்களால், இளம் வங்கியர்களை, வங்கிக் கிளைகளில் சேர்ந்த முதல்நாள், முதல் மணி நேரத்திலிருந்தே செயல் திறன் மிக்கவர்களாக செயல்பட, தயார்படுத்தும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. பயிற்சியில் வெற்றி கண்ட ஏராளமான இளம் வங்கியர்கள் குறுகிய காலத்திலேயே வங்கி கிளை மேலாளர்களாக பதவி உயர்வை எட்டியுள்ளார்கள்.
மேலும் தகவல், தகுதி, மற்றும் சேர்க்கை விபரங்களுக்கு ஆக்சிஸ் பேங்கின் யங் பேங்கர்ஸ் இணையதளத்தில் உள்நுழையவும் அல்லது ABYB பிப்ரவரி 2022 அய் சப்ஜெக்டாக கொண்ட கேள்விகளை contract@axisyoungbankers.com மின்னஞ்சல் செய்யலாம் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment