வெளிநாடு செல்பவர்களிடம் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்திய விவரங்கள் கேட்கப்பட்டன. தற்போது பாதுகாப்புக் கருதி உள்நாட்டில் இருப்பவர்களிடமும் சான்றிதழ் கேட்கப்படுகிறது!
அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
1) இந்த எண்ணை (90131 51515) உங்கள் கைப்பேசியில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2) அதில் வாட்சப் மூலம் சென்று "Certificate" எனத் தட்டச்சு செய்யுங்கள். உடனே உங்களுக்கு ஒரு OTP எண் வரும்.
3) தடுப்பூசி செலுத்திய போது எந்தக் கைப்பேசி எண்ணைக் கொடுத்தீர்களோ, அந்த எண்ணைச் சரியாகக் கொடுக்கவும்!
4) OTP எண்ணைப் பூர்த்தி செய்த பிறகு, தடுப்பூசி செய்ததற்கான சான்றிதழ் உங்களுக்கு வழங்கப்படும். அதனை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment