கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த காலிகள் தலைவர்கள் கண்டனம் - நாடெங்கும் கொந்தளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை அவமதித்த காலிகள் தலைவர்கள் கண்டனம் - நாடெங்கும் கொந்தளிப்பு

சென்னை, ஜன. 11- கோவை வெள்ளலூர்ர் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இரா. முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுமாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

கோவை மாநகரில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் .வெ.ரா. சிலைக்கு, கடந்த 08.01.2022 ஆம் தேதி இரவில் சமூக விரோதிகள் செருப்பு மாலை போட்டு, காவிப்பொடி தூவி அவமதித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே பகுத்தறிவு, சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்னெடுத்து,  சமூக நீதி சார்ந்த ஜனநாயகத்திற்காக போராடிய தலைவர்களை இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்து பேசுவது, மறைந்த தலைவர்களை அவமதிப்பது போன்ற ஆத்திரமூட்டும் செயல்கள் தொடர்ந்து நடந்து  வருகின்றன.

தமிழ்நாட்டு மக்களின் உயர்கல்வி உரிமையை பறிக்கும்நீட்தேர்வுக்கு விலக்களிக்கும் சட்ட முன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறும் நடவடிக்கையில் கவனம் செலுத்தாத ஆளுநர் நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் 08.01.2022 ஆம் தேதி  கூட்டிய சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதே நாளில் இரவில் கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, சமூக நீதி உணர்வாளர்களை ஆத்திரமூட்டி, மக்கள் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் சமூக விரோதிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது ஏதோ தற்செயலாக, மனநிலை பாதித்தவன் செய்து விட்ட காரியம் அல்ல, திட்டமிட்டு நிறைவேற்றிய சதிச் செயலாகும். சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். ஜனநாயக சக்திகளை சீண்டி விடும்  நோக்கம் கொண்ட வன்மம்.

சமூக விரோதிகளின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இது போன்ற நேர்வுகளில் மேலோட்டமான, மென்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்ற வாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் காவல்துறை யின் அணுகுமுறையும்   குற்றச் செயல்கள் தொடருவதற்கு காரணமாகும் என்பதை கருத்தில் கொண்டு, மறைந்த தலைவர்களை அவமதிக்கும் இழி செயலை கொடுங் குற்றமாக கருதி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டிவிட் டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது,

கோவை மாவட்டத்தில் வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவச் சிலையை அவமதித்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழக அரசை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

இத்தகைய வெறுப்பு அரசியலைத் தமிழ் மண்ணில் விதைத்து வரும் சனாதன சக்திகளின் கொட்டத்தை ஒடுக்கவேண்டும்.

இரா.அதியமான்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர்-தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு,

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தளபதியார் தலைமையிலான சமூகநீதி ஆட்சியில் கோவை வெள்ளலூரில் உள்ள தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சிலையை சில சமூக விரோத தீய சக்திகள் 08-1-2022 அன்று இரவு காவிச்சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்துச் சென்று அவமரியாதை செய்து வெறுப்பு அரசியலையும் சமூக பதற்றத்தையும் உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள இந்துத்துவா வாதிகள் ஒன்றிய பாசக அரசின் துணை அமைப்புகளின் வழியே திராவிடத்தின் மீது வெறுப்பு அரசியல் என்கிற பெயரில் சில சமூக விரோத தீயசக்திகள் அண்மைக்காலமாக தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சிலைகளை தமிழ்நாட்டில் அவமதித்து சமூக பதற்றம் சட்ட ஒழுங்குக் கேடு என  தூண்டி விட்டு மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை மாற்றி வன்முறையை ஏற்படுத்த முயன்றனர்.

அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சி யாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்யப்பட்டதில் தொடர்புடைய நபர்கள் அனைவரும் பாசக மற்றும் ஆர்.எஸ்.எஸின் துணை அமைப் புகளில் இருந்தவர்களை தான் காவல் துறையும் கைது செய்தது. தந்தை பெரியார் சிலையை அவமதித்து சிறைப்படுத் தப்பட்டு மிக விரைவிலேயே வெளிவரும் இந்துத்துவா பாசக ஆர்.எஸ்.எஸ்யின் முன்னணி பொறுப்பாளர்கள் கொண்டாடி வரவேற்றதை நாம் சமூக வலைதளங்களில் காணப்பட்டோம்.

இப்படி முறைகேடான வரவேற்பின் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த சமூக விரோதிகளுக்கு துணிவு வருகிறது என்கிற விதத்தில் கோவை வெள்ளலூரில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிப்பை "பாசக ஆர்.எஸ்.எஸ்." மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் இந்த சமூக விரோத சட்ட ஒழுங்கு செயலை செய்திருக்கக் கூடும் என்பதை ஆதித்தமிழர் பேரவை குற்றம் சாட்டுகின்றது.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் நிலைத்து நிற்கக் கூடிய தத்துவங்களையும், சிந்தனைகளையும், சீர்திருத்தங்களையும் சொல்லிவிட்டுச் சென்றதோடு மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

இதற்கு எதிர்வினை என்கிற பெயரில் சில சமூக விரோத கும்பல்களின் இந்த அவமதிப்பு மூலம் அரங்கேற்றிருக்கும்  இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது போன்ற அவமதிப்புகள் மூலம் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை ஒருபோதும் சிதைத்துவிட முடியாது என எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு,தளபதியார் தலைமையிலான தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காவிச்சாயம் மற்றும் செருப்பு மாலை அணிவித்த கருங்காலி கும்பல்களை சிறைபடுத்தி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்டிக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

டி.டி.வி. தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோவை வெள்ளலூரில் தந்தை பெரியார் அவர்க ளின் திருவுருவச்சிலை அவ மரியாதை செய்யப்பட்டு இருப்பது  கண்டனத்திற் குரியது.

இதற்கு காரணமான சமூக விரோத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமை யான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இத்தகைய சம்பவங்கள் தொட ராமல் தடுக்கமுடியும்


No comments:

Post a Comment