அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் ஆண் டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்ச ரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்பட் டது.
இந்நிலையில், ரஷ்யா -உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப் பில் பேசினார். ஜோ பைடன் பேசியதாவது:-
உக்ரைன் மீது படை யெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷ்யா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக் கும். ரஷியாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட் டாளிகள் தயாராக உள் ளனர்.
600 மில்லியன் மதிப் பிலான அதிநவீன ஆயு தங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத் துள்ளேன். உக்ரைனுக் குள் நுழைய ரஷ்ய படை கள் உண்மையான விழை வுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.
உக்ரைன் எல்லை நோக்கி ரஷ்யா மேலும் முன்னேறி செல்லும் பட் சத்தில் அதிபர் புதின் (ரஷ்யா) தான் இதுவரை கண்டிராத பொருளா தார தடைகளை பார்க்க நேரிடும்’ என்றார்.
உக்ரைன் விவகாரத் தில் அமெரிக்கா-, ரஷ்யா இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் போர் ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment