புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனை

 புதுச்சேரி, ஜன.17 கரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மரில்  தொலைபேசி வழியே மருத்துவ ஆலோசனைகள்   தொடங்கப்பட உள்ளது.

ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொலைபேசி ஆலோசனை

புதுச்சேரியில் கடந்த 3 வாரங் களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண் ணிக்கை உயர்ந்து வருகிறது.

வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்கு வரும் கரோனா அல்லாத நோயாளி களுக்கு கரோனா பரவும் அபா யத்தை குறைக்க  நாளை (18.1.2022)) முதல் தொலைபேசி மருத்துவ ஆலோ சனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள் ளது. 

அதன்படி ஜிப்மர் மருத்து வர்களிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள் ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ள குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும்.

நேரடி வருகை

மேலும் வருகிற 19ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆலோசனைகள்   வழங்கப் படும்.

 ஒவ்வொரு துறையும் முன் பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும். மேலும் சமூகத்திலும், மருத்துவமனையிலும் கரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளுக்கு முன்னெச் சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப் படும். அதாவது அனைத்து நோயாளி கள் மற்றும் உதவியாளர் களுக்கும் முககவசம் அணிதல், முன் பதிவு செய்து மருத்துவமனை வருகை, தொலைபேசி மருத்துவ ஆலோ சனை மற்றும் ஒரு நோயா ளிக்கு ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி போன்றவைகளை இது குறிக்கும். நோயாளிகளும், அவர் களது  உதவியாளர்களும் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

ஏனெ னில் தடுப்பூசி ஒமைக்ரான் வகை மாறுபாட்டிற்கு எதிராக கூட பாதுகாப்பை அளிக்கிறது. அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் வழக் கம்போல் இயங்கும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment