ரயில்வே கார்டு பதவிகள் ‘ரயில் மேலாளர்’ என மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

ரயில்வே கார்டு பதவிகள் ‘ரயில் மேலாளர்’ என மாற்றம்

சென்னை, ஜன.18 இந்திய ரயில்வேயில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் நிர்வாக வசதிக்காகவும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக, ரயில் ஓட்டுநர் பதவியை லோகோ பைலட் எனவும் கேங் மேன்கள் தண்டவாள பராமரிப்பாளர் எனவும் மாற்றம் செய்யப்பட்டனர்.

ரயில்வே கார்டுகளும் தங்கள் பதவி பெயரை மாற்ற வேண்டும்என கோரிக்கை விடுத்தனர். இதைஅடுத்து ரயில்வே துறை,அவர்கள் ரயில் மேலாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில் மண்டல பொதுமேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என குறிப்பிடுவதுதான் முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘அசிஸ்டென்ட் கார்டு’ என்று அழைக்கப்பட்டவர் இனிமேல் ‘அசிஸ்டென்ட் பயணிகள் ரயில் மேலாளர்’ எனவும் ‘கூட்ஸ் கார்டு’ என்று அழைக்கப்பட்டவர் ‘கூட்ஸ் ரயில் மேலாளர்’ எனவும் அழைக்கப்படுவார்.

அதுபோல், சீனியர் கூட்ஸ் கார்டு, சீனியர் ரயில் மேலாளர் என்றும், சீனியர் பயணிகள் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்றும், விரைவு ரயில் கார்டு என்று அழைக்கப்பட்டவர் விரைவு ரயில் மேலாளர் என்றும் அழைக்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment