சென்னை, ஜன.20 சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கரோனா கட்டுப் பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கை மாற்று அறுவை சிகிச்சை கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1.21 லட்சம் குக்கிரமாங்களில் 24 ஆயிரத்துக்கும் மேலான கிராமங் களில் தொற்று பாதிப்பு உள்ளது. நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 28 ஆயிரத்துக்கும் மேலான தெருக் களில் தொற்று இருக்கிறது.
சென் னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு உள்ளது. தமிழ் நாட்டில் 3 ஆயிரத்து 787 இடங்கள் கரோனா காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் இதுவரை 9 ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதித்த 94 சதவீதம் பேர் வீட்டு கண்காணிப்பி லேயே உள்ளனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் விடு முறைக்கு பலர் சொந்த ஊர் சென்ற தால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை.
நீட் விவகாரம்
நீட் மசோதா தொடர்பாக தமிழ் நாடு நாடாளுமன்ற உறுப்பினர்
கள், ஒன்றிய உள்துறை
அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள் ளனர்.
அப்போது அவர் சுகாதாரத் துறை, கல்வித்துறை அமைச்சர்களை கலந்து பேசுவதாக கூறியது நல்ல மாற்றம்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டை போல தனது ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
எனவே அமித்ஷா கேட்கும் போது, ஒன்றிய அமைச்சர்தர்மேந்திர பிரதான் நல்ல பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment