9 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

9 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு

சென்னை, ஜன.19   ஒன்பது விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் (முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

சென்னை சென்ட்ரல்-கே.எஸ்.. பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல் -மைசூரு அதிவிரைவு ரயில் (12609), எர்ணாகுளம்-கே.எஸ்.. பெங்களூரு அதிவிரைவு ரயில் (12678) ஆகிய மூன்று ரயில்களில் தலா 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மீண்டும் சேர்க்கப்படவுள்ளன. இந்த முன்பதிவில்லாத பெட்டிகள் சேர்ப்பு நாளை 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தூத்துக்குடி-மைசூரு தினசரி விரைவு ரயிலில் (16235) இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் ஜனவரி 21ஆம் தேதி முதல் இணைக்கப்படவுள்ளன.  சென்னை சென்ட்ரல்-விஜயவாடா அதிவிரைவு ரயிலில் (12712) 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஜனவரி 20ஆம்தேதி முதல் சேர்க்கப்படவுள்ளன.

மன்னார்குடி-திருப்பதி விரைவு ரயில் (17408), கோயம்புத்தூர் -திருப்பதி அதிவிரைவு ரயில் (22618), சென்னை சென்ட்ரல்-திருப்பதி விரைவு ரயில் (16203) உள்பட 9 விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், இருக்கை வசதி பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படவுள்ளன.

காஷ்மீரில் இருந்து குமரிக்கு பெண் கல்வியை வலியுறுத்தி 10 வயது சிறுமி சைக்கிள் பயணம்

விருதுநகர், ஜன.19   மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஸ் படேல். டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறார். இவரது மகள் ஜெய்பாரி சாயிபடேல் (10). 5ஆம் வகுப்பு மாணவி. பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரச்சார விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். காஷ்மீரில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சைக்கிளில் பயணத்தைத் தொடங்கிய சிறுமி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரா, கருநாடகா வழியாக சுமார் 3,600 கி.மீ. பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று (18.1.2022) காலை அவர் விருதுநகர் வந்தார். அப்போது, அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வரும் 21ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக சிறுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment