வெளிநாட்டு உதவி பெறும் 6 ஆயிரம் நிறுவனங்களின் உரிமம் ரத்து: ஒன்றிய அரசு நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

வெளிநாட்டு உதவி பெறும் 6 ஆயிரம் நிறுவனங்களின் உரிமம் ரத்து: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடில்லி, ஜன.2 நேரு நினைவு அருங்காட்சியகம், இந்திய மருத்துவ சங்கம் உள்பட சுமார் 6 ஆயிரம் நிறுவனங்களின் வெளிநாட்டு உதவி பெறும் உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் எந்த அமைப்போ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, வெளி நாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமென்றால், வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் தின் (எப்.சி.ஆர்..) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த உரி மத்தை தகுந்த காலத்தில் புதுப்பிக் கவும் வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்பு களில் 18,778 நிறுவனங்களின் உரிமம் கடந்த 2020 செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31 (நேற்று முன்தினம்) இடையே காலாவதி யாகி உள்ளது. இதில் 12,989 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது எப்.சி.ஆர்.. உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந் தன.

விண்ணப்பம் நிராகரிப்பு

ஆனால் 5,789 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த உரிம புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப் பிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே இந்த நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதைத்தவிர எப்.சி.ஆர்.. உரி மம் புதுப்பிக்கக்கோரி விண்ணப் பித்த 179 நிறுவனங்களின் விண் ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த நிறுவனங் களின் உரிமமும் ரத்தாகி உள்ளன.

இந்திய மருத்துவ சங்கம்

இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் எப்.சி.ஆர்.. உரிமங்களை இழந்துள்ளன. 31.12.2021 வரை 22,762 நிறுவனங்கள் மேற்படி உரிமம் வைத்திருந்த நிலையில், நேற்று முதல் வெறும் 16,829 நிறுவ னங்கள் மட்டுமே இந்த உரிமம் பெற்ற நிறுவனங்களாக இருக் கின்றன. இவ்வாறு எப்.சி.ஆர்.. உரிமம் ரத்தான நிறுவனங்களில் பல முக்கிய நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் டில்லி அய்.அய்.டி., ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய வாழிட மய்யம், லேடி சிறீராம் மகளிர் கல்லூரி மற்றும் டில்லி பொறியியல் கல்லூரி போன்றவை முக்கியமா னவை ஆகும்.

நாடு முழுவதும் சுமார் 6 ஆயிரம் நிறுவனங்களின் எப்.சி.ஆர்.. உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment