முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு


சென்னை,ஜன.11- முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அதிக சிகிச்சை முறைகளுடன் 5 ஆண்டு களுக்கு நீட்டிப்பதற்கான ஆணை களை வழங்கிய முதலமைச்சர் மு..ஸ்டாலின், செய்தியாளர் களுக்கான காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (10.1.2022) வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்தமாதம் முடிவடைகிறது. முன்னதாக, கடந்த 2021-2022 ஆண்டுக்கானசுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில் அறி விக்கப்பட்டபடி, சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று (10.1.2022) நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சரின்விரிவான காப்பீட்டுத் திட்டத்தை ஜன.11 (இன்று) முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, அதற்கான ஆணையை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், முதலமைச்சர் மு..ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும், யுனை டெட் இந்தியா காப்பீட்டு நிறு வனத்துக்கும் இடையில் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. இத்திட்டத்துக்கு ரூ.1,248.29 கோடிநிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் 11 தொடர்சிகிச்சை முறைகள், 52 முழுமை யான பரிசோதனை முறைகள், 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறை களை கட்டணமின்றி, அங்கீகரிக் கப்பட்ட 714 அரசு மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள் என 1,600 மருத்துவமனைகளில் பெற்று பயன்பெறலாம்.

அத் துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகளும் இதில் சேர்க்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 1.37 கோடி குடும் பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும்.

செய்தித் துறையில் அங்கீ கரிக்கப்பட்ட செய்தியாளர்கள், பருவஇதழ் செய்தியாளர்கள் குடும்பங்களை ஆண்டு வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைக்கவும், இனி ஆண்டு தோறும் செய்தித்துறையிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பட்டியல் களை பெற்று திட்டத்தில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2020-2021இல் புதுப்பிக்கப்பட்ட 1,414 செய்தியாளர்களின் குடும்பத்தி னர் முதல்கட்டமாக பயனாளி களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கான அடையாள அட்டை களை முதலமைச்சர் மு.. ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச் சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment