சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 5ஆவது ஆண்டாக சரிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 5ஆவது ஆண்டாக சரிவு

பீஜிங், ஜன. 19- உலகிலேயே அதிக மக்கள்தொகை யைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தை கள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதை சரிக்கட்ட சீன இணையர் 2 குழந்தைக ளுக்கு மேல் பெற்றுக் கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற் றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

மேலும், சீன இணை யர் 3 குழந்தைகளை பெற் றுக்கொள்ள ஊக்குவிக் கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், சீனா வில் 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை அறிக் கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-ல் சீனா வின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020இல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்து உள்ளது.

இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட் சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து அய்ந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித் துள்ளது.

சீனாவில் பிறப்பு விகி தம் சரிந்து வருவது பொரு ளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய் யும் திறன் உள்ளோர் மற் றும் ஓய்வூதியம் பெறு வோரின் விகிதாச்சாரத் திலும் தாக்கத்தை ஏற் படுத்தும் என பொருளா தார வல்லுநர்கள் எச்ச ரித்துள்ளனர்.

No comments:

Post a Comment