பெரியார் கேட்கும் கேள்வி! (566) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (566)

2000 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர், கிறிஸ்து நாதர், முகமது நபி ஆகிய சீர்திருத்தக்காரர்கள் பாடு பட்டார்கள். ஆனால் அது நம் நாட்டில் வெற்றி பெற வில்லை. இப்போது அதையேதான் நாம் செய்கிறோம். அவர்கள் பட்ட கஷ்ட நட்டங்களைப் போலவே நமக்குக் கஷ்ட நட்டம் வந்துதான் தீரும். அதற்குப் பயப்படக்கூடாது. அப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் காலத்தில், அவர்கள் இந்தியா தவிர மற்ற நாடுகளில் வெற்றி பெற்று விட்டார்கள் என்றால் இந்த விஞ்ஞான காலத்தில் அதே கொள்கைகளில்... நாம் ஏன் வெற்றி பெற முடியாது? 

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment