ஆதிதிராவிட பெண்களுக்கு மாங்காடு, திருவள்ளூர், பொன்னேரி
நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜன.19 பெருநகர சென்னை மாநகராட்சி தேர்த லில் 50 சதவீத வார்டுகள் பெண் களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநக ராட்சிகளுக்கு தேர்தல் நடை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற் கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி எடுத்து வருகிறது. அந்த வகையில் சென் னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிட்டு, வாக்காளர்கள் திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து வார்டு வரையறை பட்டியலையும், இறுதி வாக்களர் பட்டியலையும் பெரு நகர சென்னை மாநக ராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன் தீப் சிங் பேடி வெளியிட்டார்.
அந்த வகையில் சென்னையில் 20 லட்சத்து 4 ஆயிரத்து 860 ஆண்கள், 20 லட்சத்து 74 ஆயிரத்து 616 பெண்கள், 3ஆம் பாலினத்தவர்கள் 1,102 பேர் என மொத்தம் 40 லட்சத்து 80 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர்.
50 சதவீதம் பெண்கள்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (17.1.2022) தமிழ் நாட்டில் 11 மாநகராட்சிகள் பதவிகள் பெண்களுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநக ராட்சியின் மேயர் பதவியும் பெண்களுக்கு (தாழ்த்தப்பட் டோர்) ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 50 சதவீதம் அதா வது 100 வார்டுகள் பெண் களுக்கு ஒதுக்கீடு செய்து முதன் மை செயலாளரும், மாவட்ட தேர்தல் அதிகாரியு மான ககன்தீப் சிங் பேடி தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
அதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில், பெண்களுக்கு 100 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் 84 வார்டு பெண்களில் பொதுப் பிரிவினருக்கும், 16 வார்டுகள் பெண் களில் தாழ்த்தப்பட்டோர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மற்ற 100 பொது வார்டுகளில், தாழ்த்தப்பட் டோர் பிரிவினருக்கு 16 வார்டு கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
நகராட்சிகள் பட்டியல்
உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் பொது வேட் பாளர்கள் போட்டியிடும் நகராட்சிகள் பட்டியலையும் நேற்று (18.1.2022) முறையாக தமிழ் நாடு அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் நடக்கவிருக் கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் பொது வேட்பாளர்கள் போட்டியிடும் நகராட்சிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகள்: (தாழ்த்தப்பட்டோர் - பொது):
கொடைக்கானல், தாரா புரம், நாமக்கல், மானாமதுரை, நரசிங்கபுரம், புஞ்சை புளியம் பட்டி, ஒட்டன்சத்திரம், ஜெயங் கொண்டம், திட்டக்குடி, உளுந் தூர்பேட்டை ஆகியவை யாகும்.
அதேபோல், ஆதிதிராவிடர் (பெண்கள்): ஜோலார்பேட்டை, துறையூர், களக்காடு, மாங்காடு, புளியங்குடி, கூடலூர் (என்), மேட்டூர், திருப்பத்தூர், திருவள் ளூர், பொன்னேரி ஆகியவை யாகும். அதேபோல்,
பழங்குடியினர் தாழ்த்தப் பட்டோர் (பெண்கள்): நீலகிரி மாவட்டம் நெல்லியாளம்,
பெண்கள் - பொது நகராட்சிகள்
பெண்கள் (பொது): ராணிப் பேட்டை, கூத்தாநல்லூர், அதி ராம்பட்டிணம், ராசிபுரம், குன்னூர், திருவாரூர், ஊட்டி, முசிறி, திருத்துறைப்பூண்டி, செங் கோட்டை, பள்ளப்பட்டி, நெல்லிக்குப்பம், பேரணாம் பட்டு, சீர்காழி, பழனி, வாணி யம்பாடி, மேட்டுப்பாளையம், ஆத்தூர், அரக்கோணம், செங் கல்பட்டு, மதுராந்தகம், போடி நாயக்கனூர், குளித்தலை, திரு நின்றவூர், கிருஷ்ணகிரி, அரிய லூர், திருச்செங்கோடு, ராஜபா ளையம், ஆற்காடு, அருப்புக் கோட்டை, திருமங்கலம், பெரிய குளம்.
பெரம்பலூர், தர்மபுரி, வால் பாறை, மதுக்கரை, பொள் ளாச்சி, சங்கரன்கோவில், விழுப் புரம், கம்பம், பட்டுக்கோட்டை, பல்லடம், கொல்லங்கோடு, சின்னமனூர், திருவண்ணா மலை, சத்தியமங்கலம், கூடலூர் (டி), பவானி, திருத்தணி, திண்டி வனம், காரமடை, வெள்ளக் கோவில், சோளிங்கர், புதுக் கோட்டை, தேனி-அல்லிநகரம், பூந்தமல்லி, உசிலம்பட்டி ஆகி யவை ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலை மைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment