கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 11, 2022

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள்

சென்னை, ஜன.11  தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில்  மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின் பற்றினால் அதிவேகமாக ஏறும் கரோனா பாதிப்பு தொடர்ந்து வேகமாக குறையும். ஏற்கெனவே கரோனா தொற்றின் முதல் 2 அலைகளில் இருந்து தமிழ்நாடு வெற்றிகரமாக மீண்டெழுந்துள் ளது. அதைப்போல் தற்போது வரும் 3ஆவது அலையில் இருந்தும் மீண்டெழும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மய்யங்கள் என மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரம் படுக்கைகள் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்ந்து பரவி வரும் தொற்றால், பாதிக்கப்படு கிறவர் களுக்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசால் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் 40 ஆயிரம் படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கை களாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment