ஜன.5ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 2, 2022

ஜன.5ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது

சென்னை, ஜன.2 ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் சட்டசபை மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரை யுடன் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் சென்னை  ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடந்து வந்தது.

தொற்று குறைந்த நிலையில் ஜார்ஜ் கோட்டையில் வருகிற 5ஆம் தேதி சட்டசபை கூட்டம் நடை பெறும் என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்திருந் தார்.

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு

இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி, சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர்

அரங்கத்துக்கு மாற்றம்

ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், சமூக இடை வெளியுடன் சட்டமன்ற கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, கூட்டத்தை மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள் ளது. அதன்படி, வருகிற 5ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற இருக்

கிறது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டசபை செயலாளர் கே.சீனி வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசிதழில் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியிடப் பட்ட அறிவிப்பில், வரும் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை  ஜார்ஜ் கோட் டையில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டம் தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கத்தின் 3ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள் ளார். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment