பியோங்யங், ஜன. 19- அணு ஆயுதங்களை தாக்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப் போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள் ளிட்ட நாடுகளை அச்சு றுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோத னைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுக ளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுக ணையை கடந்த 5-ஆம் தேதி வடகொரியா பரி சோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11-ஆம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவு கணையை ஏவி 2-வது பரிசோதனை செய்தது. இதனையடுத்து, கடந்த 15-ஆம் தேதி ரயிலில் இருந்து இரண்டு ஏவுக ணைகளை ஏவி 3ஆ-வது முறையாக பரிசோதனை செய்தது.
இந்நிலையில், வட கொரியா மீண்டும் ஏவு கணை பரிசோதனை செய் துள்ளது. 13 நாட்களில் வடகொரியா மேற்கொள் ளும் 4-ஆவது ஏவுகணை பரிசோதனை இதுவா கும். ஏவப்பட்ட பின்னர் வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்தெ டுத்து அழிக்கும் வகையிலான ’டேக்டிகள் கைடட்’ ஏவுகணையை பரிசோதித் துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித்துள்ள போதும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment