சென்னை, ஜன.12 மாமல்லபுரம் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்புள்ள 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற காஷ்மீர் வியாபாரி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
சென்னை அருகே மாமல்லபுரம் பகுதியில் அய்டியல் கடற்கரை விருந்தி னர் மாளிகை உள்ளது. இங்கு விலை மதிப்புள்ள பார்வதி சிலை ஒன்று வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குறிப்பிட்ட விருந்தினர் மாளிகைக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி னார்கள். சோதனை நடத் திய காவல்துறையினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
காவல்துறையினர் தேடிப்போன பார்வதி சிலைக்கு பதிலாக 11 பழங்கால சிலைகள் அங்கு ஒரு பெட்டிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலைகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அவற்றை அங்கு பதுக்கி வைத்திருந்த ஜாவித்ஷா என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் தொன்மையான பார்வதி சிலை எங்கே என்றும், அந்த சிலையை கொடுத்தால், தற்போது கைப்பற்றிய 11 சிலைகளையும் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம், என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
11 சிலைகளும் திருப்பி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பார்வதி சிலையை தோண்டி எடுத்து ஜாவித்ஷா காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மிகவும் பழமையான அந்த பார்வதி சிலை உள்பட காவல்துறையினர் கைப்பற்றிய இதர 11 சிலைகளையும் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல ஜாவித்ஷா திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பார்வதி சிலையையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஜாவித்ஷா காஷ் மீரை சேர்ந்தவர். அவரது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை தமிழ்நாட்டில் இருந்து கடத்திச்சென்று வெளிநாடுகளில் விற்பனை செய்யும் தொழில் செய்பவர். சகோதரர் காட்டிய வழியில் ஜாவித்ஷாவும் சிலை கடத்தல் தொழிலை வெற்றிகரமாக செய்து வந்துள்ளார். தஞ்சாவூரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சிலைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றை ஜாவித்ஷா நடத்தி வந்துள்ளார். கரோனா காலத்தில் அந்த கடையை நடத்த முடியாமல் மூடிவிட்டார். ஜாவித்ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது சகோதரர் ரியாசை தேடி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிலைகள் கைப்பற்றப்பட்டது தொடர் பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கைப்பற்றப்பட்ட 12 சிலைகளில் 8 சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்று தொல்லியல் துறை மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். மீட்கப்பட்டுள்ள இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.
இந்த சிலைகளில் மிகவும் அரி தானது இராவணன் சிலை ஆகும். இந்தி யாவில் மராட்டிய மாநிலம் உள்பட 5 மாநிலங்களில்தான் இராவணனுக்கு கோவில் உள்ளது. அந்த கோவில்களில் ஏதாவது ஒன்றில் இந்த இராவணன் சிலை திருடப்பட்டதா, அல்லது இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டதா, என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். கைப் பற்றப்பட்ட இந்த சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment