நாடு முழுவதும் 145.16 கோடி டோஸ் தடுப்பூசி
சென்னை, ஜன.2 நாட்டில் கரோனா வைரஸ் தடுப் பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 145.16 கோடி யாக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (1.1.2022) வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறி யுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,775 பேர் கரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள னர். நேற்று முன்தினத்து டன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாள்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 61, 579 ஆக அதிகரித்துள்ளது. மகாராட்டிராவில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,368 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் உயர்ந்து 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மேற்கு வங்கத்திலும் புதிய பாதிப்பு 62 சதவீதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,128 பேர் பாதிக் கப்பட்ட நிலை யில், நேற்று புதிதாக 3,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தினசரி பாதிப்பில் 2ஆவது இடத் துக்கு மேற்கு வங்கம் சென்றது.
டில்லியில் புதிதாக 1,796 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்று முன்தினத்துடன் (1,313) ஒப்பிடுகையில், 37 சத வீதம் அதிகமாகும்.
கரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட இறப்புகளையும் சேர்த்து 353 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 406 பேர் இறந்துள்ளனர். இத னால் மொத்த உயிரிழந் தோர் எண்ணிக்கை 4,81,486 ஆக உயர்ந்தது.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,949 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 75 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 10 நாள்களுக்கு முன்பு 75 ஆயிரத்திற்கும் கீழ் குறைந் திருந்தது. ஆனால் நேற் றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,04,781 ஆக அதிகரித் துள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப் பூசிகளின் எண்ணிக்கை 145.16 கோடியைத் தொட் டுள்ளது.இதில் நேற்று மட்டும் 58,11,487 பேர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தக வல்படி, இதுவரை 67.89 கோடி மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 11,10,855 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment