சென்னை, ஜன.11 தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரு கிறது.
இதைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் ஏற்கெனவே இருந்து வரும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊர டங்கும் பிறப்பிக்கப்பட்டது. 9ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.
முதலமைச்சர் ஆலோசனை
கரோனா பரவல் தொடர்ந்து எகிறி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபு ணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று (10.1.2022) ஆலோசனை நடத் தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப் பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதா கிருஷ்ணன், காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, உலக சுகாதார நிறுவ னத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து புதிய கட்டுப் பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு
கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள் ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா - ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் திருவிழா காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போது நடைமுறையில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடு களும் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இவை தவிர்த்து பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளும் நடைமுறைப் படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
* 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டிடங்களி லும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
* 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு.
* பொங்கல் திருநாளுக்கு வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 75 சதவீத இருக் கைகளில் மட்டும் பயணிக்க அனுமதிக் கப்படுவர்.
* தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக் கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
குளிர்சாதன வசதி கூடாது
கரோனாவை கட்டுப்படுத்த பொதுவான சில அறிவுரைகளை பின் பற்ற பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள் ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக 2ஆம் தவணை தடுப்பூசி யையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
வணிக வளாகங்கள் மற்றும் கடை களில் பணிபுரிபவர்கள், உரிமையாளர் கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய தற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
அனைத்து கடைகளிலும் குளிர் சாதன வசதியை தவிர்க்க வேண்டும்.
அபராதம் விதிக்கப்படும்
கரோனா வைரஸ் பரவலை தடுக்க, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளா னவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறை களின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட் டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இங்கு மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடு களுக்கு அனுமதி இல்லை.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தொற்று பரவலை வீடு, வீடாக கண்காணிக்கப்படும். கரோனா கட்டுப் பாடுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
அச்சம் கொள்ள வேண்டாம்
தற்போது கரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கரோனா தடுப்பு நடைமுறைகள் கட் டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறு திப்படுத்த வேண்டும். தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கரோனா நோய் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும்.
கரோனா வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்மற்றும் மாவட்ட ஆட்சியர் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
கரோனா தொற்றில் இருந்து மக் களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment