‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடி திரட்டி சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடி திரட்டி சாதனை

புதுடில்லி, ஜன. 17- இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப் பட்டிருந்த நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ‘ஓரியோஸ் வெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் 46 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இதைஅடுத்து, இந்தியாவில் உள்ள மொத்த யுனிகார்ன் நிறுவனங் களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் தகுதியை பெற்றவையாக கருதப்படும்.உலகளவில் அதிக யுனிகார்ன் நிறுவ னங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது.

முதல் இடத்தில் அமெரிக்கா 487 நிறுவனங்களுடனும், சீனா 301 நிறு வனங்களுடனும் உள்ளன. பிரிட்டனில் 39 நிறுவனங்களே உள்ளன.இந்தியாவில் மொத்தம் 60 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.உலகில் உரு வாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 13ல் ஒன்று, இந்தியாவிலிருந்து வருபவை ஆகும்.

இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அதாவது 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட ‘டெக்காகார்ன்’ நிறுவனங்கள் மட்டுமே 10 உள்ளன.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கடந்த ஆண்டில் மட்டும் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 53 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment