கோவை, ஜன.19 கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலையை அவமதிப்பு செய்த இரு நபர்கள் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர். கைது செய்யப்பட்ட இருவரான அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
இவர்கள் கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பொது ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment