ஊற்றங்கரை, ஜன. 18- மறை வுற்று 29 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியார் தொண்டற செம்மல் சுய மரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவு கூறப்பட்டு, அவரது நினை வாக கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழ கத்திற்கு ரூ.25,000 நன் கொடை வழங்கப்பட்டது.
சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினை வேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்வு ஜனவரி 12 ஆம் தேதி ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் ஒமைக்கி ரான் கட்டுப்பாடுகள் கார ணமாக எளிய விழாவாக நடைபெற்றது
இந்த நிகழ்விற்கு கல் வியாளரும், ஊற்றங்கரை வித்யா மந்திர் கல்வி நிறு வனங்களின் நிறுவநரு மான வே.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெய ராமன், மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சர வணன், கழக சொற்பொழி வாளர் பழ.வெங்கடாசலம், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன் செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்து நினைவேந்தல் உரையாற்றினர்
சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை பழனியப்பன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து அவரின் நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கிய ரூ 25,000த்தை கிருட்டிணகிரி மாவட்ட கழகத்திற்கு நன்கொடை யாக கல்வியாளர் வே.சந் திரசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களிடம் வழங்கி னார். கழகத்தின் சார்பில் குடும்பத்தினர்க்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது
மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் சித. அருள், தமிழ்நாடு தொடக் கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் பொறுப்பாளரும், பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருமான எஸ்.ஏ காந்தன், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் ஜெ.கரன் சந்த் மோகன் சிங், ஆடிட்டர் லோகநாதன் சேகர் உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் உரையாற் றினர்.
மண்டல இளைஞரணி பொறுப்பாளர் வண்டி .ஆறுமுகம் ஊற்றங் கரை ஒன்றிய தலைவர்
செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சீனிமுத்து.இராஜேசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலர் வே.முரு கேசன், மத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊற்றங்கரை நகர கழக செயலாளர் இரா.வேங்க டம், ஊற்றங்கரை ஒன் றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.பழனி உள் ளிட்ட ஏராளமான கழ கத் தோழர்களும் குடும்ப உறவினர்களும், நண்பர்க ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக மாவட்ட திராவிட மகளிர் பாசறை யின் மாவட்ட செயலா ளர் வித்யா பிரபு நன்றி கூற பங்கேற்ற அனைவ ருக்கும் மதிய விருந்தோடு இறுதி நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment