புதுடில்லி, ஜன.20 இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலால் பன்னாட்டு பயணிகள் விமான போக்குவரத்து சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் 40 நாடுகள் இடையே சிறப்பு விமான சேவை மட்டும் நடைபெற்று வந்துள்ளது.
கரோனா 2ஆவது அலை கட்டுக்குள் வந்தபோது டிசம்பர் 15ஆம் தேதி முதல் பன்னாட்டு பயணிகள் விமான போக்குவரத்தை மறுபடியும் தொடங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் அப்போது ஒமைக்ரானும், கரோனாவும் இரட்டை குழாய் துப்பாக்கி போல சீறத்தொடங்கியதும், பன்னாட்டு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் நிறுத்தி வைக்க முடிவானது.
இந்த நிலையில் பன்னாட்டு விமான போக்குவரத்து சேவை நிறுத்தத்தை அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நேற்று வெளியிட்டது.
No comments:
Post a Comment