சென்னை, ஜன.18 சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 விண்வெளி ஆய்வு திட்டங்களை இந்த ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரோவின் செயல்பாடுகள் பெரிதும் சுணக்கமடைந்தன. கடந்த 2 ஆண்டுகளில் 5 செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில், இந்த ஆண் டில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 உட்பட 12 ஆய்வுத் திட் டங்களை செயல்படுத்த இஸ் ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:
ஆய்வுப் பணிகளைப் பொறுத்த வரை, மற்ற துறைகள் போல வீட்டில் இருந்தபடி பணிபுரிய இயலாது. தவிர, ககன் யான், சந்திரயான் உள்ளிட்ட அடுத்தகட்ட திட்டங்கள் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது.
இந்த ஆண்டு 12 ஆய்வுத் திட் டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஆதித்யா எல்-1, சந்திர யான்-3, எக்ஸ்போசாட், ககன் யான் விண்கல பரிசோதனை ஆகியவை முதன்மையானவை.
சூரியனின் வெளிப்புற பகுதியைஆய்வு செய்வதற்காக ஜூனில் ஆதித்யா எல்-1 விண் கலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு இறுதியில்ஏவப்
படும். இதில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டர், ரோவர் சாதனங்கள் மட்டும் இடம்பெறும். எக்ஸ் போசாட் விண்கலம் சிறிய ரக எஸ் எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இது விண் வெளியில் கதிர்வீச்சு தாக்கம் குறித்த ஆய்வுக்கு பயன்படும்.
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத் தின் கீழ் முதல்கட்டமாக, ஆளில்லா விண்கலம் 2 முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இதுதவிர, புவி கண்காணிப்பு பணிக்கான 4 இஓஎஸ், தகவல் தொடர்புக்கான 3 சிஎம்எஸ் மற்றும் ஒரு அய்ஆர்என்என்எஸ் என 8 செயற்கைக் கோள்களை இந்த ஆண்டு செலுத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ - நாசா கூட்டி ணைப்பில் தயாராகி வரும் ‘நிசார்’ விண்கலத்தை ஜிஎஸ் எல்வி ராக்கெட் மூலம் அடுத்த ஆண்டு விண்ணில்செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட் டுள்ளன.
எனவே, இஸ்ரோ வரலாற் றில் 2022ஆம் ஆண்டு மிக முக் கியத்துவம் வாய்ந்ததாக இருக் கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment