மெல்போர்ன், ஜன.21- நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு, வெப்பநிலை பதிவு களை பராமரிக்க தொடங்கியதில் இருந்து பூமியின் மிகவும் வெப்பமான 7 ஆண்டுகளில் ஒன்றாக இருந்து உள்ளது. உலக வானிலை நிறுவனம் இதை அதிகாரபூர் வமாக அறிவித்துள்ளது
கடந்த ஆண்டின் சராசரி உலக வெப்பநிலை 1.11 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 7ஆவது ஆண்டாக உலக சராசரி வெப்பநிலை 1 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்காவில் நடந்த 2 ஆய்வுகளும் கடந்த ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு எல் நினா எனப்படும் சீதோஷ்ணநிலை மாற்றம் ஏற்பட்டது. இது, பருவநிலையை குளிர்ச்சியாகவும், மழை நிறைந்த தாகவும் மாற்றும். இருப்பினும், போதிய அளவுக்கு வெப்பநிலையை குறைக்காததால், கடந்த ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.
நடப்பு 2022ஆம் ஆண்டில் எல் நினாவின் தாக்கம் நீடித்தாலும், இதுவும் வெப்பமான ஆண்டாகவே இருக் கும். அடுத்தடுத்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2021 மிகவும் குளிர்ச்சியான ஆண்டாக மாறிவிடும் என்றும் உலக வானிலை நிறுவனம் கணித்துள்ளது.
No comments:
Post a Comment