2021இல் உலகை அச்சுறுத்திய நிகழ்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 1, 2022

2021இல் உலகை அச்சுறுத்திய நிகழ்வுகள்

ஜூன் மாதம் கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணற வைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக 5 நாட்களுக்குள் சுமார் 569 பேர் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் வரலாறு காணாத வகையில் அங்கே வெப்பநிலை உயர்ந்தது. கனடியன் ஹீட்வேவ் என்று அழைக்கப்பட்டன. 

60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், ஜெர்மனியின் பல தாழ்வான நகரங்கள் மற்றும் பகுதிகள் மிகவும் அழிவுகரமான வெள்ளத்தை பார்த்தன. 

வெள்ளத்தால் அய்ரோப்பிய நாடான ஜெர்மனி பாதிக்கப்பட்டதில் சுமார் 170 பேர் இறந்தனர். வெள்ள பாதிப்பால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பை சந்தித்தனர்.

தெற்கு இத்தாலியில் வெப்ப காற்றினால் தூண்டப்பட்ட தீயால் தெற்கு கலாப்ரியாவுடன் சிசிலி நகரமும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீப்பிடித்தது.

அய்ரோப்பாவில் வெப்பநிலை 119.8 ஃபாரன்ஹீட் அல்லது 48.8 டிகிரி செல்சியஸ் என்ற வகையில் மிக அதிகமாக உயர்ந்தது.

இது வரலாற்றில் மிக உயர்ந்த வெப்பநிலை என்று குறிப்பிடப்பட்டது.

கிரீஸ் நாட்டை காட்டுத் தீ சூறையாடியதால் அந்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது.காட்டு தீ காரணமாக இயற்கை காடுகளின் ஒரு பெரிய பகுதி அழிக்கப்பட்டது. உயிரிழப்புகளும் பதிவாகி, பலர் காயமடைந்தனர். 

அமெரிக்கப் புயல்

இடா சூறாவளி கடந்த ஆகஸ்ட் மாதம் மழைக்காலத்தில் அமெரிக்க கிழக்கு கடற்கரையை தாக்கியது. இது அமெரிக்க கண்டத்தை தாக்கிய வலிமையான சூறாவளியாக பதிவு செய்யப்பட்டது.  இந்த சூறாவளியின் போது சுமார் 45 பேர் வரை உயிரிழந்தனர். மிஸிஸிபி  மாகாணம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின 



No comments:

Post a Comment