2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம் புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

2-3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை அவசியம் புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடில்லி, ஜன.19  இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய்பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஒன்றிய அரசு சார்பில்பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அவ் வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போதைய சூழலுக்கு பொருந்தும் வகையிலான கரோனா வழி காட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (18.1.2022) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:

கரோனா நோயாளிகள் சிலர் இரு மலாலும் பாதிக்கப்படுகின்றனர். அதன் படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர் யாராக இருந் தாலும் 2- 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடிக்குமேயானால், அவர்களுக்கு காச நோய் பரிசோதனைக்கு பரிந்துரைக்க வேண்டியது அவசியம்.அதே சமயத்தில், கடுமையான இருமலால் பாதிக்கப்பட் டவர்களுக்கு மட்டுமே  ஆர்சிடி பரிசோ தனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் மூலம்சிகிச்சை அளிப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். செயற்கை ஆக்சிஜன் சுவாசம் தேவைப் படாத கரோனா நோயாளிகளுக்கு ஸ்டீ ராய்டு ஊசியை செலுத்துவது எந்தப் பலனும் அளிப்பதில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல, கரோனா நோயாளிகளுக்கு மிகவும் முன்கூட்டியே இதுபோன்ற ஸ்டீராய்டு மருந்துகளை வழங்குவது  பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் என்பதை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வய துக்கு மேற்பட்டவர்கள், இதயநோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க் கரை நோய் உள்ளவர்கள், ஹெச்அய்வி, காசநோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகி யோருக்கு பெருந்தொற்று பாதிப்பு கடுமையாவதற்கும் அல்லது இறப்பதற்கும் கூட வாய்ப்பு உள்ளது.

மிதமான கரோனா பாதிப்பு உள்ள வர்களுக்கு காய்ச்சல், வலி நிவாரணி மருந் துகளை கெண்டு சிகிச்சை அளிக்கலாம். மிக தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சி.டி. ஸ்கேன் அல்லது விலை உயர்ந்த ரத்தப் பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். மிதமான தொற்று பாதிப்பு உள்ளவர் களுக்கு மெத்தில்ப்ரீட்னி சோலோன் ஊசியை 0.5 மி.கி. அளவுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

எந்தவித கரோனா நோயாளிகளுக்கும் அய்வர்மெஸ்டின், ஃபாவிபிரவிர், டாக்சி சைக்லின் ஆகிய மருந்துகளை பரிந் துரைக்க வேண்டாம். கரோனா தொற்றுக்கு உள்ளாகி 10 நாட்களுக்கு மேலாகியும் பாதிப்பு குறையாதவர்களுக்கு ரெம் டெசிவர் மருந்தினை கொடுக்கலாம். இவ்வாறு புதிய வழிகாட்டுநெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment