தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்
மதுரை, ஜன.19 ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நலத்திட்டம் செயல்பட்டு வருகிறது. ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப் படும் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங் குடியின மக்களுக்காக பிரத்யேகமாக இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல் படுத்தி வருகிறது.
ஜாதிய வன்கொடுமை, பாலியல் சித்ரவதை, படுகொலைகளால் பாதித்த வர்களுக்கு நிவாரணம் அளிப்பது, ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை, மருத்துவ சிகிச்சைகள், மறுவாழ்வு என இத்திட்டம் அனை வருக்கும் பயனுடையதாகும். மது ரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் ஆர்டிஅய் மூலம் பெற்ற தகவல்களால், இத்திட்டத்தின் குறை பாடுகள் அம்பலமாகி இருக்கின்றன. இதன்படி, கடந்த 2017-_2018 நிதியாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை உத்தரப்பிரதேசம், குஜராத், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வெறும் 137 பயனாளிகளே பயனடைந்துள்ளனர். மீதம் 19 மாநி லங்களில் ஒருவர்கூட இதனால் பயனடையவில்லை. குஜராத்தில் 70, உத்தரப்பிரதேசத்தில் 48 என இரு மாநிலங்களில் மட்டுமே பயனாளிகள் அதிகபட்சமாக பயன் பெற்றுள்ளனர். மற்ற 7 மாநிலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை 5, 3, 2, 1 என்கிற ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மிகக் குறைந் தளவாக இருக்கிறது.
2017_-2018 முதல் 2020-_2021 நிதி யாண்டுகள் வரையிலான நான்கு ஆண்டு களில் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு நாடு முழுவதும் செலவிட்ட நிதி வெறும் ரூ.4 கோடியே 79 லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே. இதில் தமிழ்நாட்டில் ரூ.15.25 லட்சத்தை நிவாரணத்தொகையாக 5 பேரே பெற்றுள்ளனர். தமிழ்நாட்டை விட மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கருநாடக மாநிலங்களில் இத் திட்டத்தில் பயனடைந்தவர்கள் மிக மிகக்குறைவாகும். குறிப்பாக கருநாடகா, பஞ்சாபில் தலா ஒரு நபரே இத்திட் டத்தில் பயனடைந்துள்ளார். அதிலும் கருநாடக மாநில பயனாளிக்கு ரூ.2 லட்சமே நிவாரணம் கிடைத்திருக்கிறது.
ஆர்டிஅய் மூலம் தகவல் பெற்ற கார்த்திக் கூறும்போது, திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறைகள் சிக்க லானதாக, சாமான்யர்களுக்கு சிரம மிக்கதாக இருக்கிறது. ஆட்சியர், கோட் டாட்சியர் தகுதி நிலை அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்ப்பது உட்பட நீண்ட நடைமுறைகளால் மக்கள் அணு குவதில்லை. நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிய வரும் நிலையில், இத்திட்டத்தில் 19 மாநிலங்களில் ஒரு பயனாளியும் இல்லாததும், குஜராத், உத்தரப்பிரதேசத் தில் மட்டும் பயன்படுத்தி வருவதும் மிகுந்த ஆச்சர்யத்தையும், பாதிக்கப்பட்ட பிற மாநிலத்தவர்களுக்கு ஏமாற்றத்தை யும் தருகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்பட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக நலத்துறை இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங் களை மாநிலத்திற்கு கொண்டு சேர்க்கும் விதம் சிறப்பு அதிகாரிகள் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment