1956 வாரிசுரிமைச் சட்டத்துக்கு முன்பாக தந்தை இறந்திருந்தாலும் தந்தையின் சொத்துகளுக்கு மகள் முழு உரிமை கோரலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

1956 வாரிசுரிமைச் சட்டத்துக்கு முன்பாக தந்தை இறந்திருந்தாலும் தந்தையின் சொத்துகளுக்கு மகள் முழு உரிமை கோரலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி,ஜன.22- தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ஆம் ஆண்டுக்கு முன்னரும் செல்லு படியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ஆம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத் தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது. 

இதன்பின் கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-இல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் படி, மூதாதையர்களின் சொத்தில் மகள் களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ஆம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்பத் தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும்’ என கோரினார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் பல கட்டங்களாக விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு  20.1.2022 அன்று தீர்ப்பு வழங்கியது.

 அதில், ‘1956-இல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்பாக இறப்பு ஏற்பட்டு இருந்தாலும் தந்தை உறவு சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு’ என அறிவித்தனர்.

ஆண் வாரிசு இல்லாத பட்சத் தில் தந்தையின் சொத்துகளுக்கு மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பர பரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள் ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் தந்தையின் சொத்துக்களுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில், தந்தையின் சகோதரனின் மகனுக்கு உரிமை கோர அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதி முராரி தலைமையிலான அமர்வு பிறப் பித்த உத்தரவில், தந்தையின் விருப்ப உயில் இல்லாத சொத்து களுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் மகள் உரிமை கோர முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment