அகில இந்திய அளவில் மருத்துவ, பல்மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை (ஜன.19ஆம் தேதி) இணையத்தில் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

அகில இந்திய அளவில் மருத்துவ, பல்மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை (ஜன.19ஆம் தேதி) இணையத்தில் தொடக்கம்

 சென்னை, ஜன.18 மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை 19ஆம் தேதி இணையத்தில் தொடங்குகிறது.

கரோனா பரவலால் நீட் தேர்வில் தாமதம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021- -2022 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொரு ளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை யடுத்து, எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு களுக்கான 4 சுற்று அகில இந்திய கலந்தாய்வு கடந்த 12ஆம் தேதி இணையதளம் மூலம் தொடங்கியது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021--2022 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி ஷ்ஷ்ஷ்.னீநீநீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் தொடங்கு கிறது.

4 சுற்றுகளாக நடக்கிறது

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் தகுதி பெற்றமாணவ, மாணவிகள் இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.

வரும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம். 25, 26ஆம் தேதிகளில் அவற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வரும் 27, 28ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரி களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படும்.

இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் 29ஆம் தேதி வெளியிடப்படும். 30ஆம் தேதி முதல் பிப்.4ஆம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

கலந்தாய்வின் இரண்டாம் சுற்று பிப்.9ஆம் தேதி, 3ஆம் சுற்று மார்ச் 2ஆம் தேதி, 4ஆம் சுற்று மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது.

இளநிலை, முதுநிலை அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழ்நாட்டில் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.


No comments:

Post a Comment