நீட் தேர்வு ரத்து விவகாரம் 17ஆம் தேதி அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு நாடாளுமன்றக் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 12, 2022

நீட் தேர்வு ரத்து விவகாரம் 17ஆம் தேதி அமித்ஷாவை சந்திக்கிறது தமிழ்நாடு நாடாளுமன்றக் குழு

புதுடில்லி,ஜன.12- தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக வரும் 17ஆம் தேதி மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஒன் றிய அரசை தமிழ்நாடு  அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு..ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு விரைவாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், டில்லியில் தி.மு.. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மனுவை கடந்த மாதம் 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினர். அதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் மனு கொடுக்க இக்குழு 3 முறை முயற்சி செய்தது. ஆனால், உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இருப்ப தாக கூறி, தமிழக குழுவை சந்திக்க அவர் நேரம் ஒதுக்க வில்லை. இந்நிலை யில், வரும் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்திக்க, அமித்ஷா நேரம் ஒதுக்கியுள்ளார்.

அப்போது, டிஆர்.பாலு தலை மையில், அதிமுக. எம்.பி. நவநீத கிருஷ்ணன், காங்கிரசின்  ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இடதுசாரிகள் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், செல்வ ராஜ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

No comments:

Post a Comment