சென்னையில் கரோனா தொற்றால் வீட்டு தனிமையில் உள்ள 1.51 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

சென்னையில் கரோனா தொற்றால் வீட்டு தனிமையில் உள்ள 1.51 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

சென்னை, ஜன.17  சென்னை மாநகராட்சிக்குட் பட்ட  பகுதிகளில் கரோனா தொற்று பாதித்த நபர்கள் முதற் கட்ட உடற்பரிசோதனை மய்யங் களுக்கு மாநகராட்சி யின் கரோனா சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோத னை களுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்து வர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 

இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண் காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மய்யங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மய்யம் அமைக்கப் பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டு தனிமையில் உள்ள நபர் களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா? என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந் தால் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது.

 மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா? அவர்களின் இல்லங்களுக்கு கரோனா தன்னார்வலர்கள் வருகிறார்களா எனவும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு அதற்குரிய ஆலோச னைகள் வழங்கப்படுகிறது.

தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மய்யங் களிலிருந்து கடந்த 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 1,51,124 நபர் களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு மருத்துவ ஆலோச னைகள் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment