15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவதை உறுதி செய்க; பாரத் பயோடெக் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 20, 2022

15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவதை உறுதி செய்க; பாரத் பயோடெக்

புதுடில்லி, ஜன.20 15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது என உறுதி செய்யும்படி பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மற்றும் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த பாதிப்பில் இருந்து நாடு இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது.  இவற்றில் டெல்டா, ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களில் அதிகரித்து வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியான கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.  பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான இதனை 15 முதல் 18 வயதினருக்கு செலுத்துங்கள் என பாரத் பயோடெக் கேட்டு கொண்டுள்ளது.

இதுபற்றி அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அங்கீகாரம் பெறப்படாத கரோனா தடுப்பூசிகள் 15 முதல் 18 வயதினருக்கு செலுத்தப்படுகிறது என எங்களுக்கு பல்வேறு தனி நபர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன. அதனால், 15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது என உறுதி செய்து கொள்வதுடன், அதிக கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என சுகாதார பணியாளர்களை நாங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment