கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்: உச்சநீதிமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 17, 2022

கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்: உச்சநீதிமன்றத்தில் தகவல்

 புதுடில்லி, ஜன.17 கரோனா காலத்தில் 1.47 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாட்டில் கரோனா தொற்று 2020 மார்ச்சில் பரவத் துவங்கியது. 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை, கரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 1.47 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள், தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இதில் 76 ஆயிரத்து 508 பேர் சிறுவர்கள்.  70 ஆயிரத்து 980 பேர் சிறுமியர். நான்கு பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஒடிசா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 24 ஆயிரத்து 405 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளனர். மராட்டியத்தில் 19 ஆயிரத்து 623 குழந்தைகளும், குஜராத்தில் 14  ஆயிரத்து 770 குழந்தைகளும், தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 14 பேரும் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment