புதுடில்லி, ஜன.12 அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் சராசரி ஊதியத்தை விட 1,400 மடங்கு அதிகம் பெற்றுள்ளார்.
இவரது ஊதிய மதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணம், அவருக்கு ஊதியமாக கிடைத்த நிறுவன பங்குகள் தான்.ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி ஊதியம், 2021இல், கிட்டத்தட்ட 51 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020இல், சராசரி ஊதியம் 43 லட்சம் ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் டிம் குக்கின் ஊதியம் 256 மடங்கு அதிகமாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்றினால், வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்தது.
கடந்த ஆண்டில், இந்நிறுவனத் தின் வருவாய் 30 சதவீதம் உயர்ந்து, 28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, விரைவில் 3 டிரில்லியன் டாலர் அதாவது, 222 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிம் குக்கின் அடிப்படை ஊதியம் 2,200 கோடி ரூபாய்.
மேலும், 60 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு பரிசு வாயிலாகவும், இலக்கை எட்டியதற்காக 8,880 கோடி ரூபாயும், இன்சூரன்ஸ் இதர வகைகளையும் சேர்த்து மொத்தம் 73 ஆயிரத்து, 38 கோடி ரூபாயை 2021இல் ஊதியமாக பெற்றிருக்கிறார்.இந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டில், 10 ஆயிரத்து, 952 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment