தமிழ்நாட்டில் நேற்று புதி தாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 417 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8,307 ஆண்கள், 5,683 பெண்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,190 பேரும், செங்கல்பட்டில் 1,696 பேரும், திருவள்ளூரில் 1,054 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறைந்தபட்சமாக மயிலாடு துறையில் 13 பேரும், அரியலூரில் 15 பேரும் பாதிக்கப்பட்டு உள் ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 413 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,861 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு
அதிக ஆபத்தான மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடு களில் இருந்து இதுவரை தமிழ் நாட்டுக்கு வந்த 27 ஆயிரத்து 346 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இவர் களில் 348 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டு, அதில் 207 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது.
அந்தவகையில் தற்போது வரை 21 மாவட்டத்தில் 185 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அனைவரும் குணம டைந்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 7 ஆயிரத்து 520 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்து 64 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
11 பேர் உயிரிழப்பு
கரோனாவுக்கு தமிழ்நாட் டில் அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத் துவமனையில் 3 பேரும் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர்.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், கோவையில் இருவரும், மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூரில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 31 மாவட்டங் களில் உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 866 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்ச மாக சென்னையில் 1,127 பேரும், செங்கல்பட்டில் 235 பேரும், கோவையில் 183 பேரும் அடங்குவர். இதுவரையில் 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 62 ஆயிரத்து 767 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment