12 - 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை - ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

12 - 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை - ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜன.19  12_14 வயது வரையிலான சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்க வில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப் பூசி போடும் பணிகள் தொடங் கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட் சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட் சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடியே 59 லட் சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர் களுக்கு 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறு வர்களுக்கு தடுப்பூசி செலுத்துவ தற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோச னைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். அவர் கூறுகையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் களுக்கு தடுப்பூசி செலுத்துவதற் கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. அது சார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர் என் றார். இந்த நிலையில் இந்த அறிவிப்புக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித் துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், 12 வயது முதல் 14 வய திலான சிறுவர்களுக்கு இப்போ தைக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 12_14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத் தும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment