11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 19, 2022

11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு

சென்னை, ஜன.19 சென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளதற்கு தமிழ்நாடு அரசுக்கு மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன்  பாராட்டு தெரிவித் துள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு  அரசு பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித் தொகுதிகளாகவும், சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் அதிகார வலிமையின் வழி மேம்படுத்தும் ஒரு சமூகநீதி அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. இத்தகைய

அறிவிப்பைச் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென் னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக

அறிவித்தது போல, துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment