ஜப்பானைச்சேர்ந்த கனே தன்கா என்ற (Kane Tanaka) முதியவர் தன்னுடைய 119 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினரோடு கொண்டாடினர். அவரைப் பற்றிய வரலாற் றுப் படங் களை அவரது கொள்ளுப்பேத்தி ஜூன்கா பகிர்ந்து உள்ளார்.
அதில் தன்கா பேசிய தகவலைப் பதிவிட்டிருந்தார். அதில் நான் இவ்வளவு நாள் வாழ்வது சாதனை என்று மெல்லிய குரலில் பேசியுள்ளார். நான் யாருக்கும் எந்த அறிவுரையும் கூறமாட்டேன் உங்கள் வாழ்க்கையை மகிழ்வோடு அனுபவியுங் கள், உடல்நலத்தைப் பேணுங்கள். அன் போடு இருங்கள், இதுதான் நான் உங்களுக் குக் கூறுவது என்று அதில் பேசி யுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது இவர் வாழ்ந்த பகுதியில் ஒரு போர்விமானம் விழுந்ததும் அதன் பாகங்களை வைத்து விளையாடியது குறித்தும் பேசியிருந்தார். ஒரு தனியார் குளிர்பான நிறுவனம் அவரது வயதோடு படத்தையும் தனது குளிர்பான பாட்டிலில் அச்சிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளது.
No comments:
Post a Comment