10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்ய தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 18, 2022

10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்ய தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை

 

சென்னை, ஜன.18  தமிழ்நாடு காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு காவல்துறைக்கு 1 லட்சத்து 33,198 காவலர்கள் தேவை என்று அரசால் ஒப்பளிக் கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.

இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2020 செப்.17ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அதே ஆண்டு டிச.13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

8 மாத பயிற்சி

அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழ்நாடு காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

இதேபோல, 969 காவல் உதவிஆய்வாளர் களை தேர்வு செய்வதற்கான தேர்வையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத் தியது.

இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளி யாக உள்ளது.

சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எனவே, வேலை தேடும் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாரிகள் கரோனாஊரடங்கு காலத்தை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment